Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வருவாய் கோட்ட அளவில் நாளை மறுநாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

திருவள்ளூர், ஜூலை 15:திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பொன்னேரி சப் கலெக்டர் மற்றும் திருவள்ளூர், திருத்தணி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பொன்னேரி சப் கலெக்டர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வுகாண அந்தந்த வருவாய் கோட்ட அளவில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.