Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் ஊராட்சி நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு: புதிதாக கட்டிடம் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை, அக்.14: பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் ஊராட்சி இ-சேவை மையத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொக்கி போட்டு மின்சாரத்தை திருடி நெல் தரம் பிரிக்கும் இயந்திரதை ஊழியர்கள் இயக்கி வருகின்றனர். மேலும், இந்த இ-சேவை மையத்தை அகற்றிவிட்டு புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம் அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிறப்பு, இறப்பு, திருமண நிதி உதவி போன்ற சான்றிதழ்கள் வாங்குவதற்காக இ-சேவை மையம் கட்டப்பட்டது. இந்த மைய கட்டிடம் பயன்படாத நிலையில் அதை விவசாயிகள் பயன்படுத்த நெல் கொள்முதல் நிலையமாக மாற்றப்பட்டது. இங்கு கூரம்பாக்கம், கோட்டை குப்பம், மஞ்சங்காரணை, அத்திவாக்கம், ஆமிதாநல்லூர், ஆலப்பாக்கம், மாம்பள்ளம், வெங்கல், நெய்வேலி, பெருமுடிவாக்கம் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் தரம் பிரிக்கும் இயந்திரத்திற்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இ-சேவை மையத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தை அகற்றிவிட்டு புதிதாக நெல் கொள்முதல் நிலையம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிக்ள் கோரிக்கை வைத்துள்ளனர்.