Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பொன்னேரி-செங்குன்றம்-பழவேற்காடு மார்க்கத்தில் முறையற்ற பேருந்து சேவையால் அலை கழிக்கப்படும் பயணிகள்

பொன்னேரி, அக்.14: பொன்னேரி-செங்குன்றம்-பழவேற்காடு மார்க்கத்தில் முறையற்ற பேருந்து சேவையால் அலைகழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொன்னேரியில் நாள்தோறும் மாலை நேரங்களில் பேருந்துக்காக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்பதால், பெண்கள் பல்வேறு இடங்களுக்கு பணி நிமித்தமாகவும், பல்வேறு விஷயங்களுக்காகவும் வெளியில் செல்லும் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி, தினசரி பணிகளுக்கு சென்று வருவோர் உள்ள நிலையில் தற்போது பெண்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

இவர்கள் அனைவரும் பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கும், பொன்னேரியில் இருந்து செங்குன்றம் பகுதிகளுக்கும் சென்று வர அதிகமாக மாநகர பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் பேருந்துகள் நேரத்திற்கு இயக்கப்படாததால் கூட்டம் அதிகமாகி, பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து மாநகர பேருந்துகள் வரிசையாக வந்து நிற்பதும், எந்த பேருந்தில் யார் ஏறுவது என்பதை தீர்மானிப்பதற்குள் ஓட்டுநர்கள் மக்களை ஏமாற்றி வாகனங்களை எடுத்து கிளம்புவதும் வாடிக்கையாகி வருகிறது. மாநகரப் பேருந்துகளில் தற்போது இருபக்க மூடும் கதவுகள் உள்ளதால் சில நேரங்களில் சில ஓட்டுனர்கள் கதவுகளை திறக்காமலேயே கூட்டத்தை பார்த்துவிட்டு வாகனத்தை எடுத்து சென்று விடுகின்றனர்.

அப்படி எடுத்துச் சென்ற வாகன ஓட்டுநர்களை பொதுமக்கள் கேட்கும்போது அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். பொன்னேரியில் இருந்து பழவேற்காடு, செங்குன்றம் பகுதிகளுக்கு முறையாக பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகரப் பேருந்துகளில் தற்போது இருபக்க மூடும் கதவுகள் உள்ளதால் சில நேரங்களில் சில ஓட்டுனர்கள் கதவுகளை திறக்காமலேயே கூட்டத்தை பார்த்துவிட்டு வாகனத்தை எடுத்து சென்று விடுகின்றனர். அப்படி எடுத்துச் சென்ற வாகன ஓட்டுநர்களை பொதுமக்கள் கேட்கும்போது அவர்களை மரியாதை இல்லாமல் பேசுவதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் தொடர்கதையாக உள்ளது.

ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து மாநகர பேருந்துகள் வரிசையாக வந்து நிற்பதும், எந்த பேருந்தில் யார் ஏறுவது என்பதை தீர்மானிப்பதற்குள் ஓட்டுநர்கள் மக்களை ஏமாற்றி வாகனங்களை எடுத்து கிளம்புவதும் வாடிக்கையாகி வருகிறது.