Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சென்னை மண்டலத்தில் 52வது கிளை திறப்பு

சென்னை, மே 14: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்னை மண்டலத்தில் தனது 52வது கிளையாக மதுராந்தகத்தில் நேற்று பெருமையுடன் திறந்து வைத்தது. பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளரும், மண்டல மேலாளருமான வி.பி.ஸ்ரீவஸ்தவா முன்னிலையில், மதுராந்தக வருவாய் மாவட்ட அலுவலர் கே.ஆர்.நரேந்திரன் புதிய கிளையைத் திறந்து வைத்தார். வங்கியின் வளர்ச்சி பயணத்திலும், சேவைச் சிறப்பிலும் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த விரிவாக்கத்தின் மூலம், தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு நவீன வங்கி சேவைகளை வழங்குவதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வங்கி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதே வேளையில், சமூக மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றையும் ஊக்குவிக்கிறது. நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும் இந்த புதிய கிளை, அப்பகுதியின் வளர்ந்து வரும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மதுராந்தகத்தில் வங்கியின் இருப்பை மேலும் வலுப்படுத்தவும் தயாராக உள்ளது.