Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

 கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

கும்மிடிப்பூண்டி, மே 12:  கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதும் அதில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி, விளையாட்டு, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பம் போட்டியில் ஒரு லட்சம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த வருடம் 12ம் வகுப்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அரசு சார்ந்த கல்லூரிகளில் உயர் கல்வி படிக்க விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். சில பாடப்பிரிவுகளில் 12 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், பன்னிரண்டாம் வகுப்பில் மூன்று இடம் பிடித்த மாணவி, மாணவிகளையும் பள்ளியின் நிறுவனர் அ.திருஞானம் மற்றும் பள்ளியின் தாளாளர் தி.தேன்மொழி திருஞானம் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.