Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போந்தவாக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத சுகாதார நிலையம் அங்கன்வாடி, ஊராட்சி மன்ற கட்டிடங்கள் : எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை, செப்.11: பெரியபாளையம் அருகே போந்தவாக்கம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத ஊராட்சி மன்ற கட்டிடம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியபாளையம் அருகே போந்தவாக்கம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து தான் அப்பகுதி மக்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி செலுத்துவார்கள். மேலும் இங்கு தான் கிராம சபை கூட்டங்களும் நடைபெறும்.

இந்நிலையில், இந்த ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதனால் புதிதாக ஊராட்சி கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 2025-2026ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.29.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இந்நிலையில், புதிய ஊராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை திறக்கவில்லை. எனவே, கட்டி முடிக்கப்பட்டு பாழாகும் ஊராட்சி அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும்.

மேலும் ரூ.17 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையமும், ரூ.40 லட்சத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையமும் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை. எனவே விரைவில் மேற்கண்ட கட்டிடங்களை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.