Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

துணை மின்நிலையத்தில் சீரமைப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி: உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை

பொன்னேரி, செப்.10: மீஞ்சூர் அருகே துணை மின்நிலையத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தை சேர்ந்த சிவராமன்(39). மேலூர் துணை மின் நிலையத்தில் 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த திங்களன்று இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் அத்திப்பட்டு புதுநகர் சுற்றுப்பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

மேலூர், துணை மின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி சிவராமன் தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். தொடர்ந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து உரிய நிவாரண வழங்க வேண்டும் என மீஞ்சூர் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுயிட்டனர். இந்த நிலையில் பழவேற்காடு செல்ல மீஞ்சூர் காவல் நிலையம் வழியாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் வந்தபோது மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தி ஈமச்சங்குக்காக தனது சொந்த பணம் ரூபாய் ஒரு லட்சம் பொன்னேரி எம்எல்ஏ ரவியிடம் கொடுப்பதாகவும் மேலும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி ஆறுதல் கூறினார். இதனால் மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.