Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருத்தணி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இரு பக்தர்களின் பைக் திருட்டு

திருத்தணி, ஆக.10: திருத்தணி கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இரு பக்தர்களின் பைக்குகள் திருட்டு போனதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் செலுத்தி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் (35) என்பவர் அவரது மனைவியுடன் திருத்தணி முருகன் மலைக் கோயிலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் பார்க்கிங்கில் வந்து பார்த்தபோது அவரது பைக் காணவில்லை. எனவே எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல், அரக்கோணம் அருகே மின்னல் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் (43) என்பவர் பேருந்து நிலையம் அருகே தணிகை குடில் பேருந்து நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு படிகள் வழியாக கோயிலுக்கு சென்றார். பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்து பார்த்தபோது அவரது பைக் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரின் புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக திருத்தணி மலைக்கோயில் மற்றும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதால் பைக்குகள் நிறுத்திவிட்டு செல்ல பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.