Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருவள்ளூரில் வரும் 12ம் தேதி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் சந்தை: துணை இயக்குநர் தகவல்

திருவள்ளூர், ஜூலை 10: திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் சந்தை வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது என்று வேளாண் விற்பனை துறை துணை இயக்குநர் சசிரேகா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் சந்தை வரும் 12ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவிக்கும் இயற்கை விவசாய பொருட்களை நல்ல தரமானதாகவும், நியாமான விலையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், சிறுதானிய உணவு வகைகள், இயற்கை மூலிகை பொருட்கள், இயற்கை பாரம்பரிய விதைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், காய்கறிகள், பழங்கள், கைத்தறி நெசவு ஆடைகள், ஆகியவை விற்பனை செய்ய உள்ளனர். மேலும், ஒவ்வொரு மாதமும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து சிறப்புரையாற்றி வருகின்றனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இயற்கை வேளாண் சந்தையில் கலந்துகொண்டு விளைபொருட்களை நேரடியாக விவசாயிகளிடம்‌ இருந்து வாங்கி பயன்பெறுமாறும், இயற்கை விவசாயிகளுக்கு ஆதரவு தருமாறும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் சசிரேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.