Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் கடும் அவதி

ஊத்துக்கோட்டை , செப்.9: பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைகின்றனர்.

பெரியபாளையம் ஊராட்சியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பெரியபாளையம், தண்டுமாநகர், ஆத்துப்பாக்கம், தண்டலம், வடமதுரை, தும்பாக்கம், காக்கவாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பொது மருத்துவம், பிரசவம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக வரும் மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது அடிக்கடி மழை பெய்து வந்தது. இதனால், பெரியபாளையம் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி மருத்துவமனை வளாகம் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.

எனவே, மருத்துவமனை வளாகத்தை சுற்றி சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் அல்லது சாலை அமைக்க வேண்டும் ஆனால் இதுவரை சிமென்ட் தளமோ அல்லது சாலையோ அமைக்கவில்லை. இதனால் நோயாளிகள், பிரசவத்திற்கு வரும் பெண்கள் தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். மேலும், மருத்துவமனைகளுக்கு சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சரிவர மருத்துவமனைக்கு வருவதில்லை. மேலும், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, மருத்துவமனை வளாகத்தில் விரைவில் சிமென்ட் தளமோ அல்லது சாலையோ அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.