Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சேதமடைந்த பயணியர் தங்கும் விடுதி: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

ஊத்துக்கோட்டை, செப்.9: ஊத்துக்கோட்டையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சேதமடைந்த பயணியர் தங்கும் விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் பைக்குகள் அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை நேரு சாலையில் காவல் நிலையம் அருகில் 1989ம் ஆண்டு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில், நெடுஞ்சாலை துறையினர் பயணியர் தங்கும் விடுதி கட்டிடம் கட்டினர். இதில் முக்கிய பிரமுகர்கள் யாராவது வந்தால் தங்குவதற்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஓய்வு எடுப்பதற்காகவும் கட்டப்பட்து. இந்த பயணியர் விடுதி பத்து வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

அதன்பிறகு, 2000ம் ஆண்டில் இருந்து பயணியர் விடுதி பொருள் வைப்பு கிடங்காக மாறி, நெடுஞ்சாலை துறையினர் பொருட்கள் வைக்க மட்டுமே பயன்படுத்தி வந்தனர். மேலும், விடுதியை சுற்றி செடி-கொடிகள் படர்ந்து முட்புதர்கள் சூழ்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் பாம்பு, விஷப்பூச்சிகள் படையெடுத்து அருகில் குடியிருப்பு மற்றும் காவல் நிலைய பகுதிகளுக்கு சென்று விடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் எப்போதும் அச்சத்துடன் உள்ளனர்.

இதனால் நெடுஞ்சாலை துறையினர் பயணியர் தங்கும் விடுதியை சுற்றியுள்ள புதர்களை அகற்றினர்.

தற்போது அந்த இடம் காலியாக உள்ளதால் ஊத்துக்கோட்டை காவல் துறையினர் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பைக்குகளை அங்கு நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீண்டும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. எனவே, இந்த வாகனங்களை காவல் துறையினர் ஏலம் விட வேண்டும். மேலும் சேதமடைந்து கிடக்கும் பயணியர் தங்கும் விடுதியை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.