Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டி அருகே சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

திருவள்ளூர், ஜூலை 9: கும்மிடிப்பூண்டி அருகே சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.16.89 லட்சம் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. மேலும் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நெல்லூர் மாவட்டம், காவாலி, வைகுண்டபுரம், விஷ்ணு, அரக்கோணம் கணேசன், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏழுமலை, ஆந்திரப் பிரதேசம், பல்லநாடு, கங்காராவ், பள்ளிப்பட்டு, பத்மநாபன், ராணிப்பேட்டை சுப்பிரமணி,திருவள்ளூர், திருப்பந்தியூர் ஆதிசங்கர், விழுப்புரம் ரவிக்குமார், கும்மிடிப்பூண்டி, தேர்வாய் கிராமம் விஜய் 9 நபர்களையும் கைது செய்தனர்.

அப்போது அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட மொத்தம் ரூ.16 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 9 நபர்கள் மீதும் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.