Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மின் கசிவால் ரப்பர் கிடங்கில் பயங்கர தீ

திருவள்ளூர், அக்.8: திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிப்காட்டில் 200க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள, ரப்பர் பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலையில், வீணாகும் பொருட்களை வைக்கும் ரப்பர் கிடங்கில் நேற்று மின்கசிவு ஏற்பட்டு ரப்பர் கழிவுகளில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து, திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் சிறப்பு நிலைய தீயணைப்பு அலுவலர் தனசேகரன் தலைமையில் தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். தீ விபத்து குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.