Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவாலங்காட்டில் கொட்டிய கனமழை

திருத்தணி, அக்.8: எல்நினோ தாக்கத்தால், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வறண்ட பகுதியான திருவாலங்காடு சுற்று வட்டாரங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு குடிநீருக்கு வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்நிலையில், நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்திய நிலையில் திருவாலங்காட்டில் மதியம் 1 மணி அளவில் திடீரென்று கன பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கன மழைக்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்பத்தால், அவதிப்பட்டு வந்த மக்களுக்கு திடீர் மழையால், வெப்பம் குறைந்து சில்லென்று காற்று வீசியதால் சற்று நிம்மதி அடைந்தனர். ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழையை அனைத்து தரப்பு மக்களும் எதிர்நோக்கி உள்ளனர்.