திருவள்ளூர், அக்.8: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ச.கவிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சிறப்பு திட்டக் கோட்டம் 1க்கு உட்பட்ட கீழ்முதலாம்பேடு திட்டம் 2ல் விற்பனையாகாமல் காலியாக உள்ள பொது உபயோக மனை, வணிக பயன்பாட்டு மனை, மழலையர் பள்ளி மனை மற்றும் ஆரம்பப்பள்ளி மனை என மொத்தம் 4 மனைகளை பொதுமக்களுக்கு ஏல முறையில் மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் மின்னணு ஏலத்திற்கு இணையதளத்தில் விற்பனை செய்வதற்கான காலக்கெடு (8ம் தேதி) இன்று காலை 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்த விவரங்களை https://tnhb.tn.gov.in மற்றும் https://tntenders/gov/in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொண்டு, இந்த வாய்ப்பினை பெற்று பொதுமக்கள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


