Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருத்தணி அருகே மலர் அலங்காரத்தில் கிருஷ்ணர் வீதியுலா

திருத்தணி, செப். 7: திருத்தணி அருகே எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவை யொட்டி கிருஷ்ணர் பஜனை கோயில் மற்றும் கிராம வீதிகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து இருந்து. மேலும் விழாவில் குழந்தைகள் கோபால கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது,. இரவு கோபால கிருஷ்ணருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யபப்ட்டு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

கிராம மக்கள் ஒன்று கூடி மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடி கிருஷ்ணரை வரவேற்றனர். பெண்கள் தீபாராதனை பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி எஸ். அக்ரஹாரம் கிராமத்தில் கோலாகலம் காணப்பட்டது.