Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொம்மராஜ்பேட்டையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

பள்ளிப்பட்டு, செப். 7. பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜ்பேட்டையில் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகின்றது. வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தைகள், முதியோர், பெண்கள் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொடர் காய்ச்சல் மற்றும் விட்டு விட்டு காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் பொம்மராஜ்பேட்டையில் யாதவர் தெருவில் குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் தொடர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க வேண்டும். மழை நீர் தேங்கி நிற்பதை தடுத்து தூய்மையான குடிநீர் வழங்குவதை ஊராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.