பொன்னேரி, செப்.7: மீஞ்சூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் தனது சொந்த செலவில் ரூ. 1 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிக்காக விழா மேடை அமைத்து கொடுத்துள்ளார். இதனை பொதுமக்கள் பாராட்டினர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 16வது வார்டுக்கு உட்பட்ட கே.ஜி.எல் பிரபு நகரில் விழா மேடை திறப்பு விழா நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இந்த விழா மேடையில் அரசியல் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் நடைபெற்ற விழாவிற்கு 16வது வார்டு உறுப்பினர் நக்கீரன் தலைமை வகித்தார். விழா மேடையை பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மீஞ்சூர் பேரூராட்சித் துணைத் தலைவர் அலேக்ஸாண்டர், துரைவேல் பாண்டியன், ஜெயலஷ்மி தன்ராஜ், ஜெயலட்சுமி ஜெய்சங்கர், அபூபக்கர், மோகன், ராஜேஷ், புகழேந்தி சங்கர், சேகர், ராஜன், அருண்குமார் மற்றும் கே.ஜி.எல் நகர் பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேரூராட்சி கவுன்சிலர் இந்திரனை பாராட்டினர். விழாவின் முடிவில் வஜ்ரவேல் நன்றி கூறினார்.


