Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு திருத்தணி ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாமல் பயணிகள் அவதி

திருத்தணி, மே 6: கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

ஒன்றிய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடி மதிப்பீட்டில் திருத்தணி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நடைமேடைகள் மாற்றி அமைப்பு, பயணிகள் தங்கும் அறைகள், நடைமேடை, எக்ஸ்கலேட்டர் உள்பட பல்வேறு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடைமேடையில் ரயில் பயணிகள் அமரும் மேற்கூரைகள் மாற்றி அமைக்க மேற்கூரை சீட்டுகள் அகற்றப்பட்டு திறந்த நிலையில் உள்ளது. பல நாட்களாக புதிய மேற்கூரை அமைக்கப்படாததால், பயணிகள் வெயிலில் நடைமேடையில் நிற்க வேண்டிய நிலையில் அவதி அடைந்து வருகின்றனர். கோடை வெயிலுக்கு நிழல் வசதி இல்லாத ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைத்து பயணிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.