Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம் சேதம்

பொன்னேரி, நவ.5: பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரப் பகுதிக்கும், குன்னம்மஞ்சேரி இடையே ஆரணி ஆறு செல்கிறது. மழைக்காலங்களில் அப்பகுதி மக்கள் படகு மூலம் இந்த ஆற்றை கடந்து சென்று வந்தனர். ஏலியம்பேடு, புதுவாயல், இந்திரா நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக பொன்னேரி நகரத்துக்கு இந்த ஆற்றை கடந்து செல்லும் சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஆரணி ஆற்றின் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.12.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 200 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 2020ம் ஆண்டு இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் கட்டப்பட்டு ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் சிமெண்ட் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது.

இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து பாலம் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த மேம்பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.