திருத்தணி,செப்.5: டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களை பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், திருத்தணி அருகே பெரிய கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் த.ஜெ.கோகுல்ராஜ், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மைலார்வாடா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.பாபு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (ஆசிரியர் தினம்) ஒட்டி தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.


