Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே கட்டிட பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப பலி

திருவள்ளூர், செப்.5: திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவரது, மனைவி சகிலா (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கட்டிடப் பணியில் சித்தாள் வேலை செய்து வருகின்ற சகிலா, செவ்வாய்பேட்டை அடுத்த சிறுகடல் பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் சித்தாள் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியின்போது, மின் சாதன பொருட்களை மாற்றியமைக்கும் பணியில் சகிலா ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சகிலாவை,

சக பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சகிலாவின் கணவர் முருகன், இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில், விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சகிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.