Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முரசு புயல் தாக்கம் எதிரொலி வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்

பொன்னேரி, நவ.4: முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் 4 மணி நேரத்திற்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த முரசு புயல் நெல்லூர் - நரசப்பூர் இடையே ஓங்கோலுக்கு அருகே நேற்று அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 120 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விஜயவாடா கோட்டத்திற்கு உட்பட்ட காரவாடி ரயில் நிலையத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால், தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆந்திரா வழியே வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து பீகார் மாநிலம் டானாபூர் செல்லும் விரைவு ரயில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில் இயக்கப்படாமல் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ரயில் நிலைய பிளாட்பாரத்திலும், தண்டவாளத்திலும் காத்திருந்தனர்.

இதேபோல கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், ஆந்திராவிலும், வடமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சிக்னலுக்காக காத்திருந்தனர். பின்னர், சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு ரயில்கள் புறப்பட்ட சென்றன.