Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவள்ளூர் எஸ்பி அலுவலகம் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

திருவள்ளூர், நவ.3: திருவள்ளூர் எஸ்பி அலுவலகம் அருகே பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. மாவட்ட காவல் துறை சார்பில் வாகன சோதனை, கடைகளில் சோதனை, தகவலின் பெயரில் சோதனை நடத்தி போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும், அந்த கலாச்சாரம் தொடர் கதையாகவே இருக்கிறது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் மருத்துவ கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் திருவள்ளூர் டவுன் எஸ்ஐ குணசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை மடக்கி சோதனை செய்ததில், அவர்களிடம் கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (21), செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (24) என்பதும், இவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கினையும் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான சூர்யா மற்றும் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.