புழல், நவ.3: செங்குன்றம் ஆர்.ஜி.என் காலனி, பெரியார் தெருவை சேர்ந்தவர் இமானுவேல் (56). பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜோஸ்பின் நிர்மலா (52). செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும், நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டின் கிரில் கேட்டு சாத்திவிட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு, இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டிற்குள் சென்ற பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 31 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில் செங்குன்றம் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் வீட்டு பக்கத்தில் புதிதாக வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழியாக சுற்று சுவர் வழியாக எகிரி கொதித்து வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து எடுத்தது சென்றது முதற்கட்ட விசாரணை தெரியவந்ததை தொடர்ந்து போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


