Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பதவி உயர்வு பெரும் ஆண் சத்துணவு பணியாளர்கள் ஓய்வூதிய பென்ஷனில் குழப்பம்

புழல், ஆக. 3: அரசு அலுவலக உதவியாளர் பணி பதவி உயர்வு பெரும் ஆண் சத்துணவு பணியாளர்களுக்கு எந்த வகையில் ஓய்வூதிய பென்ஷன் கிடைக்கும் என்று சத்துணவு அமைப்பாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவு திட்டம் துவங்கப்பட்டது. இதில் 1993 ஆண்டு முன்பு சத்துணவு அமைப்பாளர்களாக பணியில் சேர்ந்த ஆண் சத்துணவு அமைப்பாளர்களில் விருப்பம் தெரிவித்த அமைப்பாளர்கள் 115 பேர் மட்டும் உள்ளனர். இதில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்களை தவிர்த்து 2025 2026ம் ஆண்டுக்கான அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களில் நிரப்பும் பொருட்டு 88 சத்துணவு ஆண் அமைப்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பதிவு உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக பதவி ஏற்க உள்ள அலுவலக உதவியாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் 10ம் வகுப்பு முடித்த ஆண் சத்துணவு அமைப்பாளர்கள் பதவி உயர்வு மூலம் அரசு அலுவலக உதவியாளர் பணி வழங்கப்படுகிறது. இதில் சத்துணவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ. 3400 டிஏ இல்லாமல் வழங்கப்படுகிறது. ஆனால் அலுவலக உதவியாளர் பணி வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் டிஏ உடன் ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதை அரசு தெளிவாக கூறவில்லை. எனவே பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட 88 சத்துணவு ஆண் அமைப்பாளர்களில் ஒரு சிலருக்கு வருடங்கள் உள்ளது.

ஒரு சிலருக்கு மாதங்கள் தான் உள்ளது. மாதங்கள் உள்ள பணியாளர்கள் பதிவு உயர்வை பெற்று பணியில் சேர்ந்து இதன் மூலம் பணி பலன்களை பெற உறுதியான பதிலை அரசு உத்தரவில் தெரிவிக்கவில்லை. எனவே பதிவு உயர்வு மூலம் சில மாதங்களே உள்ள அமைப்பாளர்களாக தொடரலாமா? அல்லது அலுவலக உதவியாளர் பணியில் சேர்ந்தால் ஓய்வூதியம் வேறு கிடைக்குமா? அல்லது தற்போது இருக்கும் நிலை தொடருமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ஆண் சத்துணவு அமைப்பாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.