Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொன்னேரி அருகே பரபரப்பு; 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2வது கணவன் மீது போலீசில் தாய் புகார்

பொன்னேரி, ஜூலை 3: பொன்னேரி அருகே வசித்து வரும் 41 வயது பெண் ஒருவர், தனது 14 வயது மகளுக்கு, தனது 2வது கணவர் மோகன் (63) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தமக்கு திருமணமாகி 14 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளதாகவும், அவர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதாகவும், முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், காட்டுமன்னார்கோயிலில் மேன்பவர் கன்சல்டன்சி வைத்து நடத்தி வருவதாகவும், கடந்த 2022ம் ஆண்டு ஆலங்குடியை சேர்ந்த மோகன் (63) என்பவர் முறுக்கு, சீடை விற்பனை செய்ய ஆள் தேவை என்பதால் அவருக்கு வேலை நிமித்தமாக பெண் ஒருவரை அனுப்பி வைத்ததாகவும், இந்த சம்பவத்தின் மூலம் ஆலங்குடி மோகனுடன் தமக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

அப்போது முதல் மோகன் தனக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு மற்றும் சொத்து வாங்கி கொடுத்து, தமது மகளை பள்ளியில் படிக்க வைத்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் மோகனை 2வது திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்மைக்காலமாக அவருடன் தொடர்பில் இல்லை என்றும், ஒருநாள் தங்களது அனுமதி இன்றி தனது வீட்டிற்கு வந்த மோகன் தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட தனது மகள் பள்ளியில் கவலையுடன் இருந்ததையும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாயின் 2வது கணவரான 63 வயது முதியவர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.