Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இன்று முன்னாள் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், நவ.2: முன்னாள் படைவீரர்களுக்கு இன்று சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்க உள்ளது இதில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 11 முதல் 11.30 வரையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மாவட்ட கலெக்டர் கவிதா தலைமை தாங்குகிறார். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை 2 பிரதிகளில் அளித்து பயன்பெறலாம் என இவ்வாறு கூறியுள்ளார்.