Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே பட்டதாரி பெண் திடீர் மாயம்

திருவள்ளூர், ஜூலை 2: திருவள்ளூர் அடுத்த மேல்விளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (52). விவசாயியான இவருக்கு பவித்ரா (23) மற்றும் யுவரஞ்சனி (21) என 2 மகள்கள் உள்ளனர். இதில், பவித்ராவுக்கு திருமணமான நிலையில் 2வது மகள் யுவரஞ்சனி பி.ஏ., பொருளாதாரம் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் 29ம் தேதி முருகன் வயல்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் யுவரஞ்சனி காணாமல் போனது தெரியவந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த முருகன், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் வீட்டிலிருந்த மகள் மாயமானதாக தந்தை முருகன் திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான யுவரஞ்சனியை தேடி வருகின்றனர்.