Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மனைவி கோபித்து கொண்டு சென்றதால் கணவன் தற்கொலை

திருவள்ளூர், ஜூலை 1: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சம்பத் நகரை சேர்ந்தவர் முகமது உசேன்(43). இவர் திருவள்ளூரில் செல்போன் விற்பனை மற்றும் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நஸ்ரின் என்பவருடன் திருமணம் நடந்து, ஐந்து வயதில் முகமது யூசுப் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நஸ்ரின் சண்டை போட்டுக் கொண்டு குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது அம்மா மற்றும் குழந்தையுடன் உசேன் வசித்து வந்தார். கடந்த 26ம் தேதி முகமது உசேனின் அம்மாவும் குழந்தையும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் 28ம் தேதி முகமது உசேனின் தாய் குழந்தையுடன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது முகமது உசேன் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.