Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி பைபாஸ் சாலையில் ஆட்டோவில் பின்புற டோரில் நின்று பயணம் செய்த வாலிபர்கள்

திருத்தணி, ஜூலை 1: பேருந்துகளில் சிலர் புட்போர்டில் நின்று பயணம் செய்வதை தினமும் பார்க்கிறோம். ஷேர் ஆட்டோவில் எப்படி புட்போர்டு பயணம் என்ற சந்தேகம் வருவது அனைவருக்கும் இயற்கை தான். திருத்தணியில் சித்தூர் சாலையிலிருந்து பைபாஸ் சாலை வழியாக நேற்று முன்தினம் மாலை சென்ற ஷேர் ஆட்டோவில் தொழிலாளர்கள் பயணிகள் அமரும் இடத்தில் தங்களுடன் கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு பேருந்தில் புட்போர்டு பயணம் செய்வது போல் ஆட்டோவின் பின்புற டோர் மீது நின்றுகொண்டு, மேற்கூரை தார்பாயை பிடித்துக்கொண்டு அச்சமின்றி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். ஆட்டோ டிரைவரும் கவலையின்றி பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில் அதிவேகமாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை பறக்கவிட்டார்.