வெள்ளக்கோவில், செப். 28: வெள்ளக்கோவிலில் ஞாயிறுதோறும் செயல்படும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, வெள்ளக்கோவில், புதுப்பை, முத்தூர், காங்கயம், மயில்ரங்கம் உள்ளிட்ட சுற்றுப்புற விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். விவசாயிகள் கொண்டு வந்த மர முருங்கையை கொள்முதல் செய்த வியாபாரிகள் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். சில சமயம் வெளி மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். கடந்த வாரம் 3 டன் வரத்தானது. கிலோ ரூ.25க்கு விற்பனையானது. நேற்று 1.5 டன் வரத்தானது. செடி முருங்கை கிலோ ரூ.25க்கும், மர முருங்கை ரூ.25க்கும், கரும்பு முருங்கை ரூ.38க்கும் விற்பனையானது. போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.
+
Advertisement


