Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எப்போது வேண்டுமானாலும் இடியும் ஆபத்தான நிலையில் காணப்படும் வேளாண்துறை அலுவலக கட்டிடம்

பல்லடம், செப்.21: பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பல்லடம் பேருந்து நிலையம் எதிரிலும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலும் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்த பழமையான கட்டிடம் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் செயல்பட்டு வந்த மண் பரிசோதனை மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து, அந்த மையம் பொங்கலூருக்கு இடம் மாற்றப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பிறகும், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்கள் அதே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இரு அலுவலகங்களும் இரு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது. வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்கள் தற்போது வெவ்வேறு இடங்களில் செயல்படுவதால், அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பாக விவசாயிகள் வெவ்வேறு இடங்களுக்கு அலைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த இரு துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்பட்டால், விவசாயிகள் அதிகாரிகளை எளிதாக அணுகி அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முடியும். இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்தை கட்ட வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.