Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விபத்துக்களை தடுக்க சாலை தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்

திருப்பூர், ஆக. 21: திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனங்களை முறைப்படுத்தவும் சாலைகளின் நடுவே சென்டர் மீடியன் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இரவு நேரங்களிலும், போதிய வெளிச்சம் இல்லாத வேளைகளிலும் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தால், இந்த தடுப்புகள் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரிவதில்லை. இதனால், கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் சென்டர் மீடியன் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது.

இதனை கருத்தில் கொண்டு, விபத்துகளை தவிர்க்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களின் தொடக்க பகுதிகள் மற்றும் திருப்பங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் தகடுகள் மற்றும் எச்சரிக்கை வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களின் வெளிச்சம் இதன் மீது விழும் போது பிரகாசமாக ஒளிரும் இந்த தகடுகளால், ஓட்டுநர்கள் தூரத்திலேயே தடுப்புகள் இருப்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் வாகனத்தை இயக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.