திருப்பூர், ஆக. 19: ஹஜ் 2027-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தற்காலிக பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை சுமார் 2 மாத காலமாகும். ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவ படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது ஒன்றிய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். இப்பணிக்காக மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommitteegovin அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27ம் தேதி ஆகும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.



