அவிநாசி, ஆக. 19: கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் அவிநாசியில் சங்கத்தலைவர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருகேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் நம்பியாம்பாளையம் சம்பத், சேவூர் ரவிச்சந்திரன், சாமந்தங்கோட்டை துரை கூட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்கள் 2015ல் ஒப்பந்தமான கூலி உயர்வில் இருந்து வழங்க வேண்டிய கூலியை குறைத்து வழங்குகின்றனர். இந்த கூலி குறைப்பு நடவடிக்கையை ஜவுளி உற்பத்தியாளர்கள் கைவிட வேண்டும். தொழில் நலன், தொழிலாளர் நலன், மற்றும் விசைத்தறியாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும். மேலும், கூலி குறைப்பை கண்டித்து ஒரு வார காலத்துக்கு அடையாள வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
+
Advertisement



