திருப்பூர், ஆக. 13: நிப்ட்-டி கல்லூரியில் பிபிஏ இன்டர்நேஷனல் பிசினஸ் மற்றும் வணிகவியல் துறைகளின் சார்பில் தமிழ்நாடு நேரடி பட்ஜெட் அமர்வு 2026-27 என்ற கல்விசார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி டீன் சம்பத் மற்றும் முதல்வர் ராதாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநில பட்ஜெட், அரசின் கொள்கைகள், பொது செலவினம் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கம் குறித்து மாணவர்களுக்கு அவர்கள் பயனுள்ள கருத்துக்களை வழங்கினர்.
நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து சட்டமன்றத்தின் விதிமுறைகள், நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டமன்ற நடைமுறைகள் குறித்து சபாநாயகர் விளக்கினார். 12 மாணவர்கள் ஆளும் கட்சி அமைச்சர்களாகவும், 22 மாணவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகவும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் முத்துலட்சுமி, ராஜசேகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனா்.



