Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காங்கயம் நகராட்சி கூட்டத்தில் 87 தீர்மானங்கள் நிறைவேறின

காங்கயம், ஆக.12: காங்கயம் நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தார். இதில் 18 வார்டுகளில் அடிப்படை வசதிகளான பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு, தூய்மை பணிகள் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட பராமரிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஆழ்துளை கிணற்றில் கேபிள் பழுது பார்த்தல், நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் பழுது பார்த்தல், நல்லூர் முதல் நாகரசநல்லூர் வரை ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பழுது பார்த்தல் உள்பட 87 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டுகளில் தெருநாய்கள் பிடிக்கப்படும்போது தெரியப்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.