Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வைகாசி விசாக திருவிழா தேர்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

திருப்பூர், மே 7: திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள விஸ்வேஸ்வர சுவாமி (ஈஸ்வரன் கோவில்) மற்றும் வீரராகவப் பெருமாள் கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வைகாசி விசாக தேர் திருவிழா வருகின்ற 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்களைத் தயார்படுத்தும் பணிகள் மும்முரமாகத் தொடங்கியுள்ளன. இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள தேர் நிலைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்களைச் சுத்தம் செய்தல், மரச்சிற்பங்களைப் பராமரித்தல், சாரம் அமைத்தல் போன்ற பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்தடுத்த நாள்களில் ஈஸ்வரன் மற்றும் பெருமாள் என இரு தெய்வங்களும் தனித்தனித் தேர்களில் தேர் ரத வீதி வழியாக உலா வருவது வழக்கம். அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் இந்தப் பணிகளை நேரில் கண்காணித்து

வருகின்றனர்.