Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருப்பூர் ஐயப்பா நகரில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர்,அக்.30:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகர் பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஐயப்பா நகரில் குடிநீர் குழாய் உடைந்து பல இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஐயப்பா நகரில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.பொதுமக்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகிறோம்.ஆனால் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே குடிநீர் குழாய்களை சீரமைத்து தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.