வெள்ளக்கோவில்,அக்.30: தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு நோய் தடுப்பு மற்றும் மருத்துவ குடும்ப நலத்துறை சார்பில், முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதற்கு வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.
கருத்தரங்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் கயல்விழி, இளவரசன்,பகுதி சுகாதார செவிலியர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கர்ப்பிணி தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமனை செவிலியர்கள்,பணியாளர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பெரியசாமி நன்றி கூறினார்.


