Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செல்போன் திருடிய வாலிபர் கைது

அவிநாசி,அக்.30: அவிநாசி அருகே பெருமாநல்லூர் பொடாரம்பாளையம் ஏடி காலனியில் வசித்து வருபவர் குமரேசன் (36). லோடுமேன். இவர் நேற்று தனது செல்போன் வீட்டில் சார்ஜ் போட்டு நண்பரை பார்க்க வெளியே சென்றுள்ளார். வெளியே சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்து யாரோ ஒரு நபர் செல்போனை திருடி கொண்டு தப்பி ஓடி உள்ளார்.

பின் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்தனர். இதில் செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த ரமணி (30)என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ரமணியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.