வெள்ளகோவில், செப்.22: வெள்ளகோவில் அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (28), தொழிலாளி. இவர், பைக்கில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் வெள்ளகோவில் கரூர் ரோடு குறுக்கத்தி அருகே உள்ள கல்லூரி பகுதியில் சென்ற போது அவ்வழியாக நடந்து சென்ற வெள்ளகோவில் செங்கோடம்பாளையம் மணிவேல் (66) என்பவர் மீது பைக் மோதியது.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் தினகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். மணிவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


