Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆனைமலையாறு திட்டம்: ஏர்முனை அணி எதிர்பார்ப்பு

பல்லடம், செப். 22: 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ள ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டம் போராட்டங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டதைபோல், ஆனை மலையாறு-நல்லாறு திட்டத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்.

விவசாயத்தை பாதுகாக்க இத்திட்டம் அவசியம் என்பதால், திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு மற்றும் அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தின் நீர் உரிமையை உறுதி செய்ய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.