Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரயில் மோதி வாலிபர் பலி

திருப்பூர், செப்.18: திருப்பூர்-ஊத்துக்குளி இடையே கேட்டுத்தோட்டம் பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.ஐ ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் நீல நிறத்தில் டீ-சர்ட்டும், நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயில்மோதி உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.