Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இறைச்சி கழிவு கொட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

திருப்பூர், செப். 18: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது. இதனை மீறுகிறவர்கள் மீது மாநகராட்சி கமிஷனர் அமித் உத்தரவின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்குட்பட்ட 45வது வார்டு சத்யா காலனி பகுதியில் சுகாதார ஆய்வாளர் சுபைர் மற்றும் சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டிய கோழிக்கடை உரிமையாளர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.