Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதனை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மனிஷ் தொடங்கி வைத்தார். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பல்லடம் சாலை வழியாக எல்.ஆர்.ஜி கல்லூரியை வந்தடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாணவிகள் பலரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடா்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்ட சென்றனர். இதில், வருவாய் அதிகாரி கார்த்திகேயன், சப் கலெக்டர் சிவப்பிரகாஷ், மாநகராட்சி உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன், தெற்கு தாசில்தார் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.