உடுமலை, அக். 17: உடுமலையில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையாகவும், சில இடங்களில் மிதமாகவும் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.
இதையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. உடுமலையில் நேற்றும் மழை பெய்தது. உடுமலையில் நேற்று காலை பதிவான மழை அளவு விவரம்: உடுமலை 14 மிமீ, வரஜராஜபுரம் 28, பெதப்பம்பட்டி 26, பூலாங்கிணறு 25, கோமங்கலம்புதூர் 70, திருமூர்த்திநகர் 14, நல்லாறு 14, உப்பாறு அணை 13, காங்கயம் 63, வெள்ளக்கோவல் 63 மிமீ.


