Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சினிமா பார்த்துவிட்டு சென்றபோது சோகம் லாரி மீது கார் மோதி கறிக்கடைக்காரர் பலி

காங்கயம், அக்.17: கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (24) கறிக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது நண்பர் சந்தோஷ் (22) மனோஜ் குமார் (19) உத்திரபிரகாஷ் (26) சியாம் (20) ஆகிய 5 பேரும் காரில் சின்னதாராபுரத்தில் இருந்து சினிமா பார்ப்பதற்காக வெள்ளகோயில் வந்துள்ளார். பின்பு படம் பார்த்துவிட்டு வெள்ளகோவில் மூலனூர் ரோடு மடாமேடு பகுதியில் 2.30 மணி அளவில் சென்றது ரோட்டோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது.

இதில் 5 பேருக்கும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், மகேஷ் உயிரிழந்தது தெரியவந்தது தெரிவித்தார். மற்ற 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.