Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

உடுமலை, ஜூலை 16: உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்கள் காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி காமராஜரின் கல்விப் பணிகள் பற்றியும், அவரது சிந்தனையை நாம் மனதில் நிறுத்த வேண்டும் என்றும் பள்ளி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளி ஆரம்பித்தது முதல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.இதேபோல், உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் காமராஜரை பற்றி சிறப்புரையாற்றினார். காமராஜர் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.